மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி + "||" + accident

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி:
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி பானக்கார தெருவை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (வயது 23). பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (24). இவர்கள் 2 பேரும், போலுப்பள்ளி அருகே உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் கம்பெனியில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்களில் திரும்பி கொண்டிருந்தனர். ஹரிச்சந்திரன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
வழியில் போலுப்பள்ளியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பின்னால் வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹரிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிமாறன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி சாவு
பர்கூரை அடுத்த பனகமுட்லு பகுதியை சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மேச்சேரி நகர் தேங்காய் நார் தொழிற்சாலை அருகே தனது மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பாள்யா கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (31). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பேரிகை அருகே, மாஸ்தி சாலையில் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் 3 பேர் பலி
செங்கம் அருகே சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. மரத்தில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
மரத்தில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
3. சூளகிரி பகுதியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி
சூளகிரி பகுதியில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
4. வேப்பூர் அருகே பஸ்-மொபட் மோதல்; 3 பேர் பலி
வேப்பூர் அருகே பஸ்-மொபட் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
5. இரு சக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி விபத்து; கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி
இரு சக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.