மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x
தினத்தந்தி 11 May 2022 10:27 PM IST (Updated: 11 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் 3 நாட்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி வருகிற 19-ந் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி தாலுகா தட்ரஅள்ளியில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தலைமையிலும், அஞ்செட்டி தாலுகா சீங்கோட்டையில் ஓசூர் உதவி கலெக்டர் தலைமையிலும், பர்கூர் தாலுகா கப்பல்வாடியில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையிலும், ஊத்தங்கரை தாலுகா கொண்டம்பட்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், தேன்கனிக்கோட்டை தாலுகா பிள்ளாரி அக்ரஹாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி நீலவங்கா கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் முகாம்கள் நடக்கின்றன. 
இதேபோல் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு போச்சம்பள்ளி தாலுகா கொமாண்டப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், 31-ந் தேதி ஓசூர் தாலுகா பாலிகானப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து, குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story