தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 4:57 PM GMT (Updated: 11 May 2022 4:57 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தரம்மாள் நகரில் இருந்த குளிர்ந்த மலைக்கு செல்லும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் ெபாதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் நீர் எடுக்கப்பட்டு குழுமணி- கவண்டம்பட்டி சாலை வழியாக கரூர் மாவட்டம், நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமித்து அதன் பின் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்கிறது. இதையடுத்து நெய்தலூர் காலனி மோட்டையன் தெரு அருகே உள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையின் ஓரத்தில் ஓடுகிறது. மேலும் தண்ணீர் வீணாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் தேங்கி நின்றுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். 
பொதுமக்கள், நெய்தலூர், கரூர்.

Next Story