தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 11 May 2022 10:29 PM IST (Updated: 11 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் தெறுக்கு உக்கடை பகுதியில் அஞ்சல்பெட்டி வைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஞ்சல் பெட்டி வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், அரியமங்கலம்

ஆபத்தான மின்கம்பம்
திருச்சி பெரியமிளகுபாறை ஆதி திராவிடர் தெருவின் முகப்பு பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
சித்ரா, திருச்சி.


சேதமடைந்த பாலம் தடுப்பு சுவர்
திருச்சி அரிஸ்டோ பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்துக்கும் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகன் விபத்தில் சிக்கும் அபாயம் நிலை உள்ளது. எனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
பொதுமக்கள், திருச்சி. 


ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமன இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.


வேகத்தடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேருராட்சி, 4மேல சிதேவிமங்களம் வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மண்ணச்சநல்லூர்- சமயபுரம் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
முருகன், மண்ணச்சநல்லூர், திருச்சி.

Next Story