மின்சாரம் தாக்கி பெண் பலி


மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 11 May 2022 5:03 PM GMT (Updated: 2022-05-11T22:33:58+05:30)

கே.வி.குப்பம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, தபால்காரர். இவரின் மனைவி சாந்தி (வயது 50). இவர்  அதிகாலை பெருமாள் கோவில் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியைக் கடந்து சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேேய பலியானார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story