மாவட்ட செய்திகள்

செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது + "||" + Arrested

செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது

செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது
செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
க.பரமத்தி, 
தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைகரசி, சரவணன் மற்றும் போலீசார் தென்னிலை அருகே உள்ள வைரமடை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தென்னிலை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (வயது 32), ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே புரவிபாளையத்தை சேர்ந்த பிரேம்ரஞ்சன் (26) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து தென்னிலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு சொந்தமான தலா 2 செம்மறி ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆடுகள் விற்ற தொகை ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கிராவல் மண் திருடியவர் கைது
கிராவல் மண் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
3. மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது
4. காரை சேதப்படுத்தி விவசாயியை தாக்கிய 9 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரை சேதப்படுத்தி விவசாயியை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பணம் பறித்த 3 பேர் கைது
பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்