ரூ.1½ கோடியில் சமத்துவபுரம் பராமரிப்பு பணி


ரூ.1½ கோடியில் சமத்துவபுரம் பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 11 May 2022 5:05 PM GMT (Updated: 2022-05-11T22:35:14+05:30)

செம்பட்டி அருகே ரூ.1½ கோடியில் சமத்துவபுரம் பராமரிப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது.

செம்பட்டி: 

செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, திருமண மண்டபம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இவற்றை பராமரிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவின்பேரில், ரூ.1 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் பராமரிப்பு பணிக்கான பூமிபூஜை  நடந்தது. இதற்கு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கி, பூமிபூஜையை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராமன், முருகேசன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஆத்தூர் ஒன்றிய உதவி பொறியாளர் முருகபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story