காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 10:41 PM IST (Updated: 11 May 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை:
களியக்காவிளை அருகே காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 தீவிர சோதனை
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
 மேலும், கேரள எல்லை பகுதிகளான களியக்காவிளை, கண்ணுமாமூடு, ஊரம்பு புலியூர்சாலை உள்ளிட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
1½ டன் ரேஷன் அரிசி
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது, சிறு சிறு மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.  
இதேபோல் ஸ்கூட்டரில் கடத்தி வந்த 200 கிலோ ேரஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு குடோனிலும், வாகனங்களை விளங்வகோடு தாலுகா அலுவலகத்திலும் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story