டீ கடைக்காரரை தாக்கிய தாய்-மகன் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 5:12 PM GMT (Updated: 2022-05-11T22:42:10+05:30)

டீ கடைக்காரரை தாக்கிய தாய்-மகன் கைது செய்யப்ட்டனர்

குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள கருங்களாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் விஜயகுமாரின் கடையின் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தைகள் கூறி திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது விஜயகுமாருக்கும், ஆகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று விஜயகுமார் மற்றும் அவரது அக்கா லெட்சுமி ஆகியோர் அவர்கள் கடையில் இருந்தபோது அங்கு வந்த ஆகாஷ், அவரது தாயார் முத்துலட்சுமி (41) ஆகிய 2 பேரும் விஜயகுமாரை திட்டியுள்ளனர். மேலும் ஆகாஷ் கத்தியால் விஜயகுமார் தலையில் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த விஜயகுமாரின் அக்கா லெட்சுமியை ஆகாஷ் மற்றும் முத்துலட்சுமி ஆகிய 2 பேரும் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தகராறு குறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ், முத்துலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story