15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்


15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்
x
15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்
தினத்தந்தி 11 May 2022 5:12 PM GMT (Updated: 11 May 2022 5:12 PM GMT)

15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் கோவை பெரிய கடை வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, பவிழம் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயன பொடி மூலம் பழுக்க வைத்த சுமார் 12½ டன் மாம்பழம் மற்றும் 2½ டன் சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக மேலும் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து கடைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழம், சாத்துக்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story