மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration to abandon new pension scheme

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில், திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.