குழந்தைகள் கண்முன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தைகள் கண்முன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 5:17 PM GMT (Updated: 2022-05-11T22:47:14+05:30)

ஜோலார்பேட்டை அருகே தனது பிள்ளைகளின் கண்முன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே தனது பிள்ளைகளின் கண்முன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது 32). இவர்களுக்கு சபரிஸ் (9), விஜய் (7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று மாலை சங்கீதா தனது வீட்டில் திடீரென கோவத்தில் தன்னுடைய செல்போனை தரையில் போட்டு உடைத்து உள்ளார். பின்னர் படுக்கையறைக்கு சென்று தனது குழந்தைகள்  கண் முன்னே புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டுள்ளார். 

இதை பார்த்த குழந்தைகள் இருவரும் கதறி அழுதுள்ளனர். பின்னர் இருவரும் வெளியே வந்த அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது தாயை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் சங்கீதா இறந்து விட்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தைகள் கண்முன்னே தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story