மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது + "||" + Arrested

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்  போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 26). இவர் கோயமுத்தூரில் உள்ள ஓட்டலில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சபரிநாதன் 17 வயது சிறுமியை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் சமூக நல அலுவலர் சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சபரிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின் கீழ் சபரிநாதனின் தந்தை பாலசுப்பிரமணியன், தாய் வசந்தா மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுவனை தாக்கியதாக 12 பேர் மீது வழக்கு
சிறுவனை தாக்கியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. கடையை சூறையாடிய 5 பேர் மீது வழக்கு
கடையை சூறையாடிய 5 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது
5. தர்மபுரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது வழக்கு
தர்மபுரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.