மாவட்ட செய்திகள்

வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம் + "||" + Meeting

வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம்

வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம்
வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம் நடந்தது.
நொய்யல், 
நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் வட்டார வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, வேளாண்  வணிகதுறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, உழவர் நலத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இதில், மாவட்ட தோட்டக்கலைத் துறை இயக்குனர் மணிமேகலை, வேளாண்மை துறை அலுவலர் ரேணுகாதேவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜவேல், தோட்டக்கலை துறை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நந்தகுமார், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் உஷா, விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்; 19 மனுக்கள் பெறப்பட்டன
மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்; 19 மனுக்கள் பெறப்பட்டன
2. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
3. டிட்டோஜாக் ஆயத்த கூட்டம்
டிட்டோஜாக் ஆயத்த கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது.
4. தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது.
5. தர்மபுரியில் இன்று ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்.