தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 10:55 PM IST (Updated: 11 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.சி.பாபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டத் தலைவர் எம்.ரமேஷ் வரவேற்றார். ஜி.அறிவழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாநிலத் துணைச் செயலாளர் கலைவாணன், ஆர்.சங்கர், வட்டத் தலைவர் எஸ்.சிவகுமார், வட்ட செயலாளர்கள் பி.பரசுராமன், திருப்பதி உள்பட பலர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்  கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார். ‌

Next Story