கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 5:28 PM GMT (Updated: 2022-05-11T22:58:24+05:30)

கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 
தமிழக கவர்னரை கண்டித்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் தலைமை வைத்தார். மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகி  பொன்னுச்சாமி, இளம்புலிகள் செயலாளர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ் புலிகள் கட்சியினர் 14 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Next Story