பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்


பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 11 May 2022 5:28 PM GMT (Updated: 2022-05-11T22:58:53+05:30)

பெரும்பாறை அருகே காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

பெரும்பாறை: 

பெரும்பாறை அருகே உள்ள தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மங்களம்கொம்பு பகுதியில் உள்ள தோட்டங்களில் 2 காட்டு யானைகள் புகுந்து வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story