விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
வெள்ளியணை அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
வெள்ளியணை,
குடும்ப பிரச்சினை
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கத்தாளபட்டி பகுதி கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவரது மனைவி சிவகாமி (45). இவர்களுடைய மகள் தீபா (20). இவர் தாந்தோன்றிமலையிலுள்ள அரசு கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
முருகேசன் தற்போது குடும்பத்துடன் கரூர் ஆண்டான்கோவில் மேற்கு பகுதியில் தங்கியிருந்து தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். மது போதைக்கு அடிமையான முருகேசனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி சாவு-தாய்க்கு சிகிச்சை
இதனால் சிவகாமியும், தீபாவும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இந்தநிலையில் கருப்பகவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்திற்கு சென்று வருவதாக கணவர் முருகேசனிடம் கூறிவிட்டு சிவகாமி தனது மகள் தீபாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பின்னர் அன்று மதியம் தோட்டத்தில் சிவகாமியும், தீபாவும் பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர்.
இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story