2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வெள்ளிச்சந்தை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவசுடலை மாடசாமி கோவில்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் ராமநாதபுரத்தில் சிவசுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் நிர்வாகிகள் கதவை பூட்டி விட்டு பூசாரி சென்றார்.
நேற்று காலையில் கோவிலுக்கு வந்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தனர்.
திருட்டு
இதே போல் உன்னங்குளம் இசக்கியம்மன் கோவிலிலும் திருட்டு நடந்து உள்ளது. அங்கும் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி சீனிவாசன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் 2 கோவில்களிலும் நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story