நடராஜர் பற்றி யூடியூப்பில் அவதூறு வீடியோ


நடராஜர் பற்றி யூடியூப்பில் அவதூறு வீடியோ
x
தினத்தந்தி 11 May 2022 11:05 PM IST (Updated: 11 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் குறித்து யூடியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டுள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் போலீசில் புகார் அளித்தனர்.

ராமநாதபுரம், 
சிதம்பரம் நடராஜர் குறித்து யூடியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டுள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  சிவனடியார்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகார்
சிதம்பரம் நடராஜர் குறித்து யுடூ புருட்டஸ் என்ற யூடியூப் தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைனர் என்பவர் சிதம்பரம் நடராஜர் குறித்தும் அவரின் சிவ தாண்டவ நடனம் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இந்துக்கள் மனதை புண்படுத்தும் படியாக இந்த வீடியோ உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் இந்த வீடியோவை உடனடியாக அகற்றக் கோரியும் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகணேசன் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் நேற்று காலை மனு அளித்தனர். 
வழக்குப்பதிவு
அந்த மனுவில், இந்துக்கள் மனதை புண்படுத்தும்படி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ள அந்த வீடியோவை உடனடியாக தளத்தில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுதொடர்பாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் யூடியூப் தளத்தை முடக்க வேண்டும்.
போராட்டம்
 தமிழக அரசு உடனடியாக போலீசார் மூலம் நடவடிக்கை  எடுக்காவிட்டால் காசியில் இருந்து ஆயிரம் அகோரிகளை அழைத்து வந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். மேலும், இதனை வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story