வாகனம் மோதி 7 வயது சிறுவன் படுகாயம்
வாகனம் மோதி 7 வயது சிறுவன், தந்தை படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் தெற்குத்தெருவை சேர்ந்தவர் நாகரெத்தினம் (வயது35). இவரின் மகன் அபினேஷ் (7). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரை நாகரெத்தினம் பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் முன்னால் அமர வைத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அச்சுந்தன்வயல் சோதனை சாவடி அருகில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி தந்தையும் மகனும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நாகரெத்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கீழக்கரை கோகுல்நகரை சேர்ந்த சாரங்கபாணி என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story