பெருங்களூர் பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பெருங்களூர் பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 11 May 2022 11:12 PM IST (Updated: 11 May 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

பெருங்களூர் பிடாரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆதனக்கோட்டை:
தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் இன்று பக்தர்கள் காவடி, அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. 
இதையடுத்து பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் முக்கிய வீதிகளில் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. 
திரளான பக்தர்கள் தரிசனம் 
தேரோட்டத்தை முன்னிட்டு பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முத்துலெட்சுமி சாமியய்யா ஆகியோர் இணைந்து அன்னதானம் வழங்கினர். இதில் பெருங்களூர், கூத்தாச்சிப்பட்டி, மணவாத்திபட்டி, குட்டகுளவாய்ப்பட்டி, லெட்சுமபுரம், மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, பாப்பாவயல், போரம், மாந்தாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story