மாணவர்களுக்கு பதக்கம்


மாணவர்களுக்கு பதக்கம்
x
தினத்தந்தி 11 May 2022 11:12 PM IST (Updated: 11 May 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழக அரசால் நடத்தப்பட்ட மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் சப் ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் இந்த பள்ளியை சேர்ந்த தனலட்சுமி, வெண்ணிலா ஆகிய 2 மாணவிகள் வெவ்வேறு எடைப்பிரிவில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றனர். வெண்கலப்பதக்கம் பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி, உதவியாளர் குபேந்திரன் ஆகியோருக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


Next Story