2 பெண்களிடம் திருடிய 9 பவுன் நகைகள் மீட்பு


2 பெண்களிடம் திருடிய 9 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 11 May 2022 5:47 PM GMT (Updated: 11 May 2022 5:47 PM GMT)

நாட்டறம்பள்ளி அருகே 2 பெண்களிடம் திருடிய 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே 2 பெண்களிடம் திருடிய 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. 

2 வாலிபர்கள் கைது

வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் சேர்ந்த சீனிவாசன் மகன் சின்னராஜ் (வயது 25). குடியாத்தம் அருகே கல்லப்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் மோகன் (22). இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு சம்பந்தமாக அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக  நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.

9 பவுன் நகைகள் மீட்பு

இருவரிடம் விசாரணை செய்ததில் கடந்த 2020-ம் ஆண்டு நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த அம்சாவிடம் 5 பவுன் நகை மற்றும் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரியிடம் 4 பவுன் நகை திருடியதாகவும், அந்த நகைகளை தங்கள் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்தாகவும் தெரிவித்தனர். 
அதைத்தொடர்ந்து மறைத்து வைத்திருந்த 9 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

பிறகு இருவரும் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story