அழியாநிலையில் பொது இடத்தில் வீட்டுமனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
அழியாநிலையில் பொதுஇடத்தில் வீட்டு மனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
வீட்டுமனை
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள அழியாநிலையில் 40 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை (பிளாட்) போடப்பட்டு வருகிறது.
இந்த இடம் கடந்த 1964-ம் ஆண்டு நூற்பாலை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது. அதில் தற்போது தனியார் வீட்டுமனை அமைத்து வருகிறார்கள்.
சாலை மறியல்
பொது இடமான இந்த இடத்தில் வீட்டுமனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைவரது கருத்தும் கேட்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story