தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-11T23:22:16+05:30)

தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஊழியர்கள் சங்க 24-வது மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சடபோகன் வரவேற்றார். முன்னாள் பொதுச்செயலாளர் நூர்அகமது, முன்னாள் சம்மேளன பொதுச்செயலாளர் தியாகராஜன் ஆகியோர் சங்க கொடியேற்றினர். முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் தியாகராஜன், பொதுச் செயலாளர் நூர்அகமது ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். வரவேற்புக்குழு செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அப்துல்கரீம், பொது தொழிலாளர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். தபால் துறை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Next Story