புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்


புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-11T23:22:22+05:30)

புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக கல்வி நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் புதிரை வண்ணார் இனத்தைச் சேர்ந்த மக்களை மேம்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக உறுப்பினராக சேர விரும்பும் நபர்கள் புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற்று நலத்திட்ட உதவிகள் பெற்று பயன் அடைந்திட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு சாதி சான்று, வருமான சான்று, ஆதார் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து நல வாரிய உறுப்பினர் அட்டை பெற்று பயன் அடைந்திட கேட்டுக்கிறேன்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story