மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் காயம்


மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 11 May 2022 11:32 PM IST (Updated: 11 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் காயம் அடைந்தனர்

காரைக்குடி, 
கல்லல் அருகே வேப்பங்குளத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள திடலில் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் மாலை தொழுவத்தில் கோவில் காளைக்கு மரியாதை செலுத்திய பின்னர் தொழுவத்தில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதை அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். காளைகள் முட்டியதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டை முன்னிட்டு ஏராள மானோர் அங்கு வந்து பார்வையாளர்களாக கலந்துகொண்டு பார்வையிட்டனர். மேலும் திருவேகம்புத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

Next Story