வாகனங்கள் கணக்ெகடுக்கும் பணி
சாலையை மேம்படுத்துவதற்காக வாகனங்கள் கணக்ெகடுக்கும் பணி தொடங்கியது.
சோளிங்கர்
சோளிங்கரில் கருமாரியம்மன் கோவில் அருகில் சோளிங்கர்-அரக்கோணம் சாலை, சோளிங்கர்-பாணாவரம் கூட்ரோடு இருந்து காவேரிப்பாக்கம் செல்லும் சாலை மற்றும் கொடைக்கல் செல்லும் சாலை ஆகிய 3 இடங்களில் நெடுஞ்சாலைத் துறை சோளிங்கர் உள்கோட்டம் சார்பில் போக்குவரத்துக் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் உதவி கோட்டபொறியாளர்கள் பாலாஜி சிங், நிதின் மேற்பார்வையில் ஆர்.ஐ.தேவேந்திரன் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலைப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வாகனப் போக்குவரத்துக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்தக் கணக்கெடுக்கும் பணியில் பஸ்கள், லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள், மோட்டார்சைக்கிள்கள், சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் எவ்வளவு செல்கிறது என்பதைக் கணக்கெடுத்து சாலையை அகலப்படுத்துவதற்கும், மேம்படுத்தலுக்கும் கணக்கெடுப்பு பணியை பயன்படுத்துவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story