மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு தாய் மனு
மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு தாய் மனு கொடுத்தார்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்ப தால் அவரை பராமரிக்க முடியாமல் கருணை கொலை செய்ய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கணவர் இறந்த நிலையில் மகனை பராமரிக்க முடியாமல் கிட்னி செயல் இழந்து சிரமப்பட்டு வருகிறேன். 42 ஆண்டுகளாக எனது மகனை கஷ்டப்பட்டு பராமரித்து வந்த நிலையில் தற்போது என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. பராமரிப்பதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாததால் எனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது.
Related Tags :
Next Story