பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
சோளிங்கரில் பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி நடைபெற்றது.
சோளிங்கர்
சோளிங்கரில் கால்நடை மருத்துவ அலுவலகம் சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கம் திட்ட பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். சோளிங்கர் கால்நடை மருத்துவர் சத்யா, டாக்டர்கள் மனோகரன், செந்தில் வேலவன், சுமித்திரா, அருள்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் பாஸ்கர் கலந்துகொண்டு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு பற்றி பயிற்சியளித்தார்.
இதில் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள 40 பஞ்சாயத்துகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு இந்த மாத கடைசியில் ரூ.17,500 மதிப்புள்ள 5 ஆடுகள் வழங்கப்படுவதாக உதவி இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார். மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் தலா 100 பேர் வீதம் 700 பேருக்கு 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story