விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம்
மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் சின்ன கடைத்தெருவில் பிரசித்தி பெற்ற பால பிரசன்ன சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்தநிலையில் மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு பன்னீரில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில் தற்போது கோடை வெயில் வாட்டி வருவதால் மழை பெய்ய வேண்டி 2 அடி உயரமுள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் சிலையை கண்ணாடி தொட்டியில் வைத்து வெட்டி வேர் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் மற்றும் பன்னீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன் நோக்கம் அக்னி நட்சத்திரத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும், மழை பெய்ய வேண்டி கடந்த 4 ஆண்டுகளாக பன்னீர் அபிஷேகம் செய்து வருவதாகவும், மழை பெய்தவுடன் விநாயகர் சிலையை தண்ணீர் தொட்டியில் இருந்து எடுத்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story