கீழடியில் கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுப்பு


கீழடியில் கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 May 2022 11:56 PM IST (Updated: 11 May 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டன

திருப்புவனம், 
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் இதுவரை மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்தக் குழிகளில் ஏற்கனவே பாசிமணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சிறுவர்கள்- பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், மனித தலை உருவம் கொண்ட சுடுமண் சிற்பம், சுடு மண்ணால் ஆன செங்கல் சுவர், அருகில் சேதமடைந்த நிலையில் பெரிய பானைகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டபோது பச்சை நிறத்தில் 2 கண்ணாடி பாசிமணிகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆழமாக குழிகள் தோண்டியதை தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் வியக்கத் தக்க அரிய பொருட்கள் அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது

Next Story