தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்


தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 11 May 2022 11:58 PM IST (Updated: 11 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தது.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அல்லாபக்ஷி (வயது 65). இவருடைய கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அருகில் உள்ள நூருல்லா (60) என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி எரிந்தது. 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் 2 பேரின் வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story