காரைக்குடி பகுதியில் காலையில் குளுமை, மதியம் வதைத்த வெயில்


காரைக்குடி பகுதியில் காலையில் குளுமை, மதியம் வதைத்த வெயில்
x
தினத்தந்தி 11 May 2022 6:38 PM (Updated: 11 May 2022 6:38 PM)
t-max-icont-min-icon

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் குளுமையும், மதியம் வெயில்தாக்கமும் இருந்து வருகிறது.

காரைக்குடி, 
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் குளுமையும், மதியம் வெயில்தாக்கமும் இருந்து வருகிறது.
காலையில் குளுமை
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் அக்னிநட்சத்திர உக்கிர வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. இதையடுத்து வெளியில் செல்லும் மக்கள் குளிர் பானங்கள் மற்றும் பழங்களை அதிகஅளவில் சாப்பிட்டு வெயில் தாக்கத்தை போக்கி வந்தனர். 
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை வானம் கருமேக கூட்டத்துடன் குளுமையான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அந்த நேரத்தில் வெயில் தாக்கம் இல்லாமல் காணப்படுகிறது.
வெறிச்சோடிய சாலைகள்
அதன்பின்னர் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக காலையில் வானம் மேகமூட்டமாக காணப்படு வதால் எப்படியும் நல்ல மழை பெய்து அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் குறையும் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதன்பின்னர் சூழ்நிலை மாறி விடுகிறது. 
ஆனால் மதிய வேளையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story