தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 May 2022 7:04 PM GMT (Updated: 11 May 2022 7:04 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் 
 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகைகடை பஜார் பகுதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகின்றது. மேலும் மழை காலங்களில் சாலையில் நடக்க முடியாத அளவு கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் தேங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர். 

தாழ்வாக செல்லும் மின்கம்பி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ்.காவனூர் கிராமத்தின் வயல்வெளி பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் கைக்கு எட்டும் தொலைவில் தாழ்வாக செல்கிறது.  இதனால் விவசாயிகள் ஒருவித அச்ச உணர்வுடனே வயல்வெளியில் வேலை செய்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் இந்த மின்கம்பிகளால் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் மின்கம்பிகளை உயரமாக அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரேம்குமார், பரமக்குடி.

குண்டும், குழியுமான சாலை
 மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் முனியாண்டி கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த தெருவில் வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஸ்ரீதேவி, எஸ்.ஆலங்குளம்.

சேதமடைந்த மின்கம்பம்
 சிவகங்ைக மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கோபாலபச்சேரி கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. ஆபத்தான இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் இந்த மின்கம்பத்தால் மின்விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
வள்ளரசு, கோபாலபச்சேரி.

வாகன ஓட்டிகள் அவதி
 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அச்சம்தவிர்த்தான் பகுதியில் சாலையின் ஒரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. மேலும் சிலர் குப்பைகளை தீயிட்டு எரிகின்றனர். இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் ெகாட்டப்படுவதையும், குப்பைகளை எரியூட்டுவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
 
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல கன்னிச்சேரி கிராமத்தில் இருந்து அபிராமம் பகுதிக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த தார்சாலையை மையமாக கொண்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ேபாக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், முதுகுளத்தூர்.

தடுப்புச்சுவர் வேண்டும்
 மதுரை யானைகல் கீழ்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழவாய்ப்பு உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் சிலர் அதிகவேகத்தில் சாலையில் பயணிக்கின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி பாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

கூடுதல் பஸ் தேவை
 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து திருகோஷ்டியூருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. வேலைக்கு செல்வோர், கோவில்களுக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிைல உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுவதோடு அவர்களின் அன்றாட வேலையும் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
சுப்பிரமணி, காளையார்கோவில்.

ஆபத்தான கிணறு
 மதுரை மாவட்டம் மேலூர் புதுச்சுக்காம்பட்டி பஞ்சாயத்து ஆத்துக்கரைப்பட்டியில் இருந்து முத்துவேல்பட்டி செல்லும் சாலையின் அருகில் தடுப்பு சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் 2 கிணறுகள் உள்ளன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கிணற்றில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து நடைபெறும் முன்னர் ஆபத்தான கிணற்றை சுற்றி தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜ்குமார், மேலூர்.

தொற்றுநோய் பரவும் அபாயம் 
மதுரை மாவட்டம் 7-வது வார்டு காந்திபுரம் வழி பாண்டியன்நகர் 1-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கின்றது. இதனால் சாைலயில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் பரவுகின்றது. மேலும் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் தேங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், மதுரை.


Next Story