ஏரியூர் கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா


ஏரியூர் கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 12 May 2022 12:34 AM IST (Updated: 12 May 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. மீன்களை அள்ளி கிராம மக்கள் மகிழ்ந்தனர்.

சிங்கம்புணரி, 
ஏரியூர் கண்மாயில்  மீன்பிடித் திருவிழா களைகட்டியது. மீன்களை அள்ளி கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
விவசாயம்
 சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் ஊராட்சியில் உள்ளது ஏரி கண்மாய். இந்த கண்மாய் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவில் உள்ளது. ஏரி கண்மாய் தண்ணீர் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. 
ஏரியூரில் பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் ஏரி கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் வருங்காலங்களில் நல்ல மழை பெய்து கண்மாய் மீண்டும் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி வருண பகவானை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
தலா 3 கிலோ
அதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணிக்கு மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கிராமத்தின் முக்கி யஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று பச்சைகொடி காட்டிய உடன் பரந்து விரிந்த கண்மாயில் மீன்பிடியாளர்கள் கண் மாய்க்குள் இறங்கி மீனை பிடிக்க ஆரம்பித்தனர். 
மேலூர், கீழவளவு, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டம் நிலை, வடவன்பட்டி, தும்பைப்பட்டி, எருமைப்பட்டி, சூரக்குடி, எஸ். மாம்பட்டி, டி.மாம்பட்டி, அரளிக்கோட்டை, திருப்பத்தூர் போன்ற பகுதியில் இருந்து மீன்பிடியாளர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி பலவகை வலைகளை கொண்டு மீன் பிடிக்கத் தொடங்கி னார்கள். கண்மாயில் ஜிலேபி, கட்லா, கெளு த்தி, கெண்டை, விரால், மீன்கள் சிக்கின. ஒவ்வொருவருக்கும் தலா 3 கிலோவிற்கு மேற்பட்ட மீன்கள் கிடைத்தன. 
மகிழ்ச்சி
கண்மாயில் இருந்து அனைவருக்கும் அதிகப்படியான மீன்கள் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்கள் கிடைக்கவில்லை என்று யாரும் குறை சொல்லாத அளவிற்கு போதுமான மீன்கள் கிடைக்கப் பெற்றதில் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் ஏரியூர் சுற்றியுள்ள கிராம பகுதிகள் அனைத்திலும் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

Next Story