தொழிலாளியை மிரட்டியவர் கைது


தொழிலாளியை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 7:06 PM GMT (Updated: 2022-05-12T00:36:09+05:30)

தொழிலாளியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி வ.உ.சி. நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் கணேசன் (வயது 42). கூலி தொழிலாளி. அதே பகுதி சுடலை கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா மகன் முத்துமணிகண்டன் (22). கணேசன் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக சுத்தமல்லி விலக்கு விஸ்வநாதன் நகர் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்து மணிகண்டன், கணேசனிடம் ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story