கிணற்றில் மிதந்த சாக்கு மூடையால் பரபரப்பு


கிணற்றில் மிதந்த சாக்கு மூடையால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2022 12:36 AM IST (Updated: 12 May 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மிதந்த சாக்கு மூடையால் பரபரப்பு

மேலூர்
மேலூர் அருகே பூஞ்சுத்தியில் ஒரு வயலில் உள்ள கிணற்றில் சாக்கு மூடை மிதந்தது. ேமலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால்  கொலைசெய்யப்பட்டு பிணத்தை மூடையில் வைத்து கிணற்றில் வீசி இருப்பார்களா என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதுபற்றி தகவல் கிடைத்து வந்த மேலூர் போலீசார் அந்த சாக்கு மூடையை மீட்டு சோதனை செய்தனர். அப்போது அதனுள் அழுகிய நிலையில் ஒரு கன்றுக்குட்டி இருந்தது. இறந்துபோன கன்றுக்குட்டியின் உடலை யாரோ சாக்கு மூடையில் கட்டி இந்த கிணற்றில் போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Next Story