விபத்தில் கொத்தனார் சாவு


விபத்தில் கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 12 May 2022 12:36 AM IST (Updated: 12 May 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் கொத்தனார் சாவு

திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே உள்ள பேய்குளத்தைச் சேர்ந்தவர் ராம்குமார்(வயது 28). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் உண்ணிபட்டி பாலத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story