மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் உண்டியல் எண்ணிக்கை + "||" + Bills in Meenakshi Amman and Kallazhagar temples

மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் உண்டியல் எண்ணிக்கை

மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் உண்டியல் எண்ணிக்கை
மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் உண்டியல் எண்ணிக்கை
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி மீனாட்சி அம்மன்கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது கிடைக்கப்பெற்ற காணிக்கைகள் மீனாட்சி அம்மன்கோவில் பழைய திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 21 ஆயிரத்து 523 ரூபாயும், தங்கம் 1 கிலோ 160 கிராம், வெள்ளி 1 கிலோ 430 கிராம் கிடைக்க பெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய துணைகமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அருகே கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ.52 லட்சத்து 65 ஆயிரத்து 157-ம், தங்கம் 66 கிராமும், வெள்ளி 154 கிராமும், பக்தர்களிடமிருந்து காணிக்கையாக வரப் பெற்று இருந்தது. 
உண்டியல் திறப்பின்போது துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், பிரதிபா, ஆய்வாளர் அய்யம்பெருமாள் மற்றும் கோவில் பணியாளர்கள், சேவா சங்கத்தினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
2. வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள்; மத்திய அரசு தகவல்
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என மத்திய வெளிவிவகார இணை மந்திரி இன்று தெரிவித்து உள்ளார்.
3. கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
4. மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
5. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.