காரை சேதப்படுத்தி விவசாயியை தாக்கிய 9 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரை சேதப்படுத்தி விவசாயியை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சன்(வயது 22). ஊராட்சி மன்ற உறுப்பினர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மில்க்யூர்(29) என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் ஜெய்சனுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான காரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்னிலையில் அடித்து நொறுக்கியது. நேற்று முன்தினம் மில்க்யூர் தம்பி ஜஸ்டின் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஜெய்சனின் தந்தை விவசாயி வின்சென்ட் பவுல்ராஜை வழிமறித்து வெட்டினர்.
இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காரை அடித்து நொறுக்கியது மற்றும் வின்சென்ட்பவுல்ராஜை வெட்டியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜஸ்டின், ரேமண்டு, மனோஜ், ஜான்சன், கொய்யாத்தோப்பு அலேக்ஸ், பாண்டிச்சேரி அலேக்ஸ், ஜெரால்டு உள்பட 9 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story