தர்ம சாஸ்தா கோவிலில் வருஷாபிஷேகம்


தர்ம சாஸ்தா கோவிலில் வருஷாபிஷேகம்
x
தினத்தந்தி 11 May 2022 7:13 PM GMT (Updated: 2022-05-12T00:43:28+05:30)

வத்திராயிருப்பு அருகே தர்ம சாஸ்தா கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பை அடுத்த பிளவக்கல் அணை அருகே கிழவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள தர்மசாஸ்தா கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ம சாஸ்தா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வருட அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குலதெய்வமாக வழிபடும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story