அகழாய்வில் கிடைத்த மண்பானைகள்
சிவகாசி அருகே அகழாய்வில் மண்பானைகள் கிடைத்தன.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே அகழாய்வில் மண்பானைகள் கிடைத்தன.
அகழாய்வு
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் உச்சிமேடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 6 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் 4 குழிகள் 12 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளன.
சமீபத்தில் அகழாய்வில் மையத்தில் தோண்டப்பட்ட 5 மற்றும் 6-வது குழிகளில் ஏராளமான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. 5-வது குழியில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்தபட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகள், மண் கிண்ணங்கள், வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட வளையங்கள் கிடைத்துள்ளன.
மண் பானைகள்
மேலும் 5 அடி ஆழத்தில் 4 சிறிய மண் பானைகள் கிடைத்துள்ளன. 6-வது குழியில் மேற்பரப்பில் 1 அடி ஆழத்தில் 3 சிறிய மண் பானைகள் கிடைத்துள்ளன. இந்த மண்பானைகளை ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டு அதிகாரிகள் முன்னிலையில் திறப்பதற்காக இன்னும் பானைகள் திறக்கப்படாமல் உள்ளன. அதிகாரிகள் முன்னிலையில் மண்பானைகள் திறக்கப்பட்டால் தான் பானையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
Related Tags :
Next Story