நாங்குநேரியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை விரைந்து அமைக்க வேண்டும் அமைச்சரிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


நாங்குநேரியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை விரைந்து அமைக்க வேண்டும் அமைச்சரிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2022 12:54 AM IST (Updated: 12 May 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை விரைந்து அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

இட்டமொழி:
நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். இதையடுத்து நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியானது மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. எனினும் அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு அறிவித்தும், நாங்குநேரி மக்களுக்கு தலைமை ஆஸ்பத்திரி கிடைக்காத நிலையே உள்ளது.
இ்ந்த நிலையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நாங்குநேரி பகுதி மக்கள் சிலர் நேற்று சென்னையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், ‘‘நாங்குநேரியில் அரசு அறிவித்தபடி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை உடனே கட்டித்தர வேண்டும’’் என்று வலியுறுத்தி இருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன், தி.மு.க நாங்குநேரி நகர செயலாளர் வானமாமலை, ம.தி.மு.க. வழக்கறிஞர் பேச்சிமுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story