ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்,மே.12-
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சாணுரப்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி காவேரி (வயது 65). இவர் நேற்று திருச்சியை அடுத்த காட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செங்கிப்பட்டியில் இருந்து பஸ்சில் வந்தார்.
காட்டூரில் இறங்கியபோது, தற்செயலாக கழுத்தை பார்த்தபோது, அவர் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை. ஓடும் பஸ்சில் அதனை யாரோ நைசாக பறித்து சென்று விட்டனர். இது குறித்து காவேரி திருெவறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் தங்க சங்கிலியை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story