பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்திலும்  அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2022 12:56 AM IST (Updated: 12 May 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

தாயில்பட்டி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார். 
கண் சிகிச்சை முகாம் 
தாயில்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமினை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்து நாட்டுக்கும், அனைத்து ஆட்சியாளர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருக்கும். அங்கு நடக்கு சம்பவங்கள் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.  இந்தியாவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜனநாயக பூர்வமான கவுன்சிலாக இருக்க வேண்டும். அது சர்வாதிகார கவுன்சிலாக இருக்கக்கூடாது. 
பழைய ஓய்வூதிய திட்டம் 
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது  வட்டார தலைவர்கள் காளியப்பன், செல்வக்கனி ஆகியோர் உடனிருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டைப்பட்டி சுப்புராம் செய்திருந்தார்.

Next Story