பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சண்முக சுந்தர்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ படி மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர் முத்துசாமி, நிர்வாகிகள் சீதாராமன், கண்ணன், நல்லபெருமாள், பரமசிவன், சிவசுப்பு பாண்டியன், ராமசாமி, மாயாண்டிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story