மாவட்ட செய்திகள்

குப்பையில் தீ + "||" + Fire in the trash

குப்பையில் தீ

குப்பையில் தீ
குப்பையில் தீப்பிடித்தது.
திருச்சி ஒத்தகடையில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின் பகுதியில் குப்பைகள், மரக்கிளைகள் கிடந்தன. நேற்று மதியம் அந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. இது குறித்து அப்பகுதியினர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.