முன்னாள் ராணுவ வீரர் மர்மச்சாவு
ராஜபாளையம் அருகே முன்னாள் ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சுப்புராம் (வயது51). முன்னாள் ராணுவ வீரர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து சுப்புராம் வீட்டிற்குள் இறந்து கிடப்பதாக பெருமாளுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக தளவாய்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story